நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ‘நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு?’ என்கிற தலைப்பில் சாப்பிடும் போட்டி நடைபெற்றது.
வடிவேலு பாணியில் சொல்வதானால், ‘ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?‘ என்று சொல்லும் அளவுக்கு வித்தியாசமானதொரு போட்டியை, கல்லிடைக்குறிச்சியில் உள்ள நாச்சியார் அசைவ தர்பார் ஹோட்டல் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தில், நடிகர் பரோட்டா சூரி ஒரு சாப்பாட்டுப் போட்டியில் பங்கேற்று, 50 பரோட்டாக்களை சாப்பிட்டு முடித்ததும், கடைக்காரர் அதனை ஒத்துக் கொள்ளாததால், ‘நீங்க கோட்டை எல்லாம் அழிங்க.. நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்’ என்று சொல்லி கலங்கடிப்பார்.
அதே பாணியில் இந்த ஹோட்டலில், ‘நம்ம ஊரு பரோட்டா சூரி யார்?’ என்ற பெயரில் சாப்பிடும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அதிகபட்சமாக சாப்பிட்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 5001 பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. போட்டி காலை 11 மணிக்கு தொடங்கி, இரவு 9 மணிக்கு முடிவடையும் என ஹோட்டல் நிர்வாகத்தினர் அறிவித்து இருந்தனர். போட்டிக்காக ஹோட்டலில் மைக் செட் கட்டப்பட்டு, போட்டி குறித்த அறிவிப்பு வெளியாகிக் கொண்டிருந்தது.
இந்தப் போட்டியில் பங்கேற்க சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருந்தன. அதன்படி, மது அருந்தியவர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி கிடையாது. போட்டி நடைபெறும் நேரத்தில் இடையூறு செய்வது போல நடந்து கொண்டால் காவல்துறையில் புகார் செய்யப்படும். காலை 11 மணி முதல் இரவு 7 மணிவரை இப்போட்டியில் பங்கேற்க டோக்கன் வழங்கப்படும். ஆனால் சரியாக 9 மணிக்கு போட்டி முடிவடையும். அதன் பின்னர் யாரும் பங்கேற்க அனுமதி கிடையாது.
போட்டியில் பங்கேற்பவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவரின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படுவது தெரிந்தால், அதாவது அதற்கு மேலும் சாப்பிட முடியாத அளவுக்கு அசாதாரண நிலை ஏற்பட்டால், அவரை உடனடியாகப் போட்டியில் இருந்து நீக்கி , உரிய மருத்துவம் செய்ய அழைத்து செல்லப்படுவார். போட்டியில் பங்கேற்பவர்கள் அனைவரும் தாங்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கான தொகையை செலுத்தி விட வேண்டும். போட்டியின் முடிவில் அதிக எண்ணிக்கையில் சாப்பிட்டவருக்கு பரிசுத் தொகையாக 5001 வழங்கப்படும்’’ என விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருந்தன.

இந்தப் போட்டி குறித்து அறிந்ததும் உள்ளூரில் இருந்து மட்டும் அல்லாமல் பக்கத்து கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து போட்டியில் பங்கேற்றனர். அதனால் பகலில் இருந்தே ஹோட்டலில் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொருவரும் சாப்பிட்ட பரோட்டாக்களின் எண்ணிக்கை குறித்துக் கொள்ளப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் கூட்டம் அதிகமாக இருந்தது. இடம் கிடைக்காதவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது.
இப்போட்டியில், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கோதர் மைதீன் என்பவர், 42 பரோட்டாக்களை சாப்பிட்டு பரிசை தட்டிச் சென்றார்.

அவரிடம் பேசியபோது, ‘நான் அத்லெடிக் பிளேயர். தினமும் ஓட்டப்பந்தயத்துக்காக பயிற்சி எடுத்துக் கொள்வேன். நானும் நண்பர்களும் சேர்ந்து பயிற்சி செய்து விட்டு, சில சமயம் நாங்களே, ‘யார் அதிகம் சாப்பிடுகிறார்கள்?’ என போட்டி வைத்துக் கொள்வோம். அதில் பெரும்பாலும் நானே ஜெயிப்பேன். அந்த பயிற்சியும் இன்று கைகொடுத்தது. அதனால்தான் என்னால் 42 பரோட்டாக்களை சாப்பிட முடிந்தது. எனக்கு அடுத்த இடத்தில் வந்தவர் 35 பரோட்டாக்களை மட்டுமே சாப்பிட்டு இருக்கிறார்’’ என்று சொன்னவர், இன்னும் நாலைஞ்சு பரோட்டாக்களை கூட என்னால் சாப்பிட முடியும்’’ என்று சொல்லி, அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.
இந்தப் போட்டிக்கான ஏற்பாட்டை செய்திருந்த நாச்சியார் ஹோட்டல் நிர்வாகி மோசஸ் என்ற பாஸ்கரன் பேசும்போது, ‘‘நான் பொறியியல் பட்டதாரி. கம்ப்யூட்டர் படித்துவிட்டு சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செஞ்சேன். அந்த வேலை பிடிக்காததால் சொந்த ஊருக்கு வந்து கம்ப்யூட்டர் கடை நடத்தி வந்தேன். பின்னர் ஹோட்டல் தொழிலில் ஈடுபட முடிவு செய்தேன். விக்கிரமசிங்கபுரத்தில் நான் கடை தொடங்கினேன்.
இந்தக் கடையை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். கடையை விளம்பரப்படுத்துவதற்காக ஆரம்பத்தில், 'ஒரு பிரியாணி வாங்கினால் மற்றொன்று இலவசம்'னு அறிவித்தேன். கூட்டம் அலைமோதியது. அதேபோல, 'பத்து பரோட்டா வாங்கினால் கூடுதலாக பத்து பரோட்டா இலவசம்'னு அறிவித்தேன். இந்த சமயத்தில், கூட்டம் அலைமோதியதால் காவல்துறையை வைத்துக் கூட்டத்தைச் சமாளிக்க வேண்டிய நிலைமை உருவானது.
அதன்பின்னர், சில தினங்களுக்கு முன்பு பக்கத்து ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வந்து, அவர்களுக்குள்ளாகவே அதிக பரோட்டா சாப்பிடுவது தொடர்பான போட்டியை நடத்தினாங்க. ரொம்ப ஜாலியா அவங்க இதில் பங்கேற்றதைப் பார்த்ததும், நாமே இப்படி ஒரு போட்டியை நடத்தலாமேன்னு தோணுச்சு. அதனால் இந்தப் போட்டியை நடத்தினேன். இதில் நிறைய பேர் ஆர்வத்தோட கலந்துக்கிட்டது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்தப் போட்டியில் கோதர் மைதீன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பரிசுத்தொகை வழங்கினோம்’’ என்றார் உ ற்சாகமா

No comments:
Post a Comment